/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Eu-pNCiU4AI2c6k.jpg)
அறிமுக இயக்குநர் விஜயராஜ் இயக்கத்தில் உருவாகும் சைக்கலாஜிக்கல் திரில்லர் வகை படத்தில் நடிகர் பரத் நாயகனாக நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக ஜனனி ஐயர் நடிக்கிறார். இயக்குநர் விஜயராஜ், கார்த்திக் சுப்பராஜின் உதவி இயக்குநர் ஆவார். இப்படத்தை லிப்ரா ப்ரொடக்சன்ஸ் தயாரிக்கிறது.
ஹோட்டலில் வேலை பார்க்கும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்த பட்டதாரி இளைஞரின் கதாபாத்திரத்தில் பரத் நடிக்க, டாக்டர் கதாபாத்திரத்தில் ஜனனி ஐயர் நடிக்க உள்ளார். மேலும், கரு பழனியப்பன், சிங்கம் புலி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.
'முன்னறிவான்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)